• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  • Share on

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மக்கள் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் கட்டுமான பொருட்கள், விலையேற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடுடா பிச்சையா, முன்னாள் மாவட்ட தலைவர் ஏடிஎஸ் அருள், ஐஎன்டியூசி தலைவர் ராஜ், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் சாந்தி, மாவட்ட செயலாளர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

பசுவந்தனையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் : கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்

புதியம்புத்தூரில் கஞ்சா விற்றவர் கைது - 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்

  • Share on