• vilasalnews@gmail.com

பசுவந்தனையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் : கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்

  • Share on

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பசுவந்தனையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனையில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை இன்று அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.

ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரும், ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றியச்செயலாளருமான காந்தி காமாட்சி முன்னிலை வகித்தார். 

ஒன்றிய கவுன்சிலர் மேகலிங்கம், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, பால்ராஜ், அதிமுக நிர்வாகிகள் முருகன், சுப்பையா,மாரியப்பன் அண்ணாதுரை. நம்பிராஜ்,அருணாச்சலம் முத்தழகு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயராம் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

  • Share on

தூத்துக்குடியில் துரை வைகோ பிறந்த நாள் : மாநகர மதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  • Share on