தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் என். பெரியசாமியின் மகன் வக்கீல் ராஜா பெரியசாமி-சுபா தம்ப தியரின் மகள் டாக்டர் மதிஷா எபிபெரினுக்கும், சாயர்புரம் சக்கம்மாள்புரம் அழகேசன்-குணசாந்தி தம்பதியரின் மகன் தமிழக அரசின் நிதித்துறை தணிக்கை ஆய்வாளர் சரத்குமர னுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 மணிக்கு மேல் 9 மணிக்குள் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் திருமண மகாலில் வைத்து திருமணம் நடக்கிறது.
விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். விழா ஏற்பாடுகளை ராஜா என்.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.