• vilasalnews@gmail.com

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி - நாளை தொடங்குகிறது

  • Share on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி உடன்குடியில் நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகி ருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் தொகுதியில் உள்ள 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நாளை (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. போட்டிகளை தொழில் அதிபர் அனிதா சு.ஆனந்த மகே சுவரன் தொடங்கி வைக்கி றார். இந்தபோட்டிகள் உடன் குடி, சிவலூர், தேரியூர் பகுதி யில் உள்ள மைதானங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2-வது பரிசு ரூ.40 ஆயிரம், 3-வது பரிசு ரூ.30 ஆயிரம், 4-வது பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப் பட உள்ளது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டக்காரருக்கு பரிசு வழங்கப்படும். சிறந்த பேட்ஸ் மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வா கிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

ரூ.25 லட்சம் வாடகை பாக்கி - முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு 'சீல்'

திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இல்ல திருமண விழா - தூத்துக்குடியில் நாளை நடக்கிறது

  • Share on