• vilasalnews@gmail.com

ரூ.25 லட்சம் வாடகை பாக்கி - முத்தையாபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு 'சீல்'

  • Share on

முத்தையாபுரத்தில் ரூ.25 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் மின்வாரிய அலுவலகத்துக்கு மாநகராட்சி அதிகாரி கள் 'சீல்' வைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட முத்தையாபுரம் ஜே.எஸ்.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத் தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அந்த மின்வாரிய அலுவல கத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் ரூ.25 லட்சத்து 47 ஆயிரத்து 489 பாக்கிவைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதி காரிகள் நேற்று அந்த மின்வாரிய அலுவலகத்தை பூட்டி சீல்' வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மின்வாரியம் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன் பிறகு மின்வாரிய அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Share on

முத்துநகர் படுகொலை.. படமான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 100 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி - நாளை தொடங்குகிறது

  • Share on