தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி கடந்த 3 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 25½ கிலோ கஞ்சா, 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்கில் ஈடுபட்ட 22 பேர் உள்பட 53 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 482 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 4 ஆயிரத்து 650 கிலோ புகையிலை பொருட்கள், 5 கார்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.