• vilasalnews@gmail.com

மாவட்டத்தில் குடிசைவாசிகள் கணக்கெடுக்கும் பணி ( ஏப்.4 - ஏப்.25) - பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகளில் வசிப்போர் குறித்து ஏப்.4 முதல் 25ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (ஊரகம்) மற்றும் மாநில அரசின் இதர திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

‘குடிசை இல்லா தமிழகம்” என்பதை இலக்காகக் கொண்டு 2010ம் ஆண்டு நடந்த ‘கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கணக்கெடுப்பை” அடிப்படையாகக் கொண்டு ‘ஜனவரி 2022ம்” மாதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், தற்போது ‘வீட்டுவரி கேட்பு பதிவேட்டின்” அடிப்படையில் 2010ம் ஆண்டிற்குப் பிறகு 28.02.2022ம் தேதிவரை பதிவேட்டில் இடம்பெற்றுள்ள குடிசைகளில் வசிப்போரிடம் 04.04.2022 முதல் 25.04.2022 வரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கணக்கெடுக்கும் அலுவலர்களாக கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் அல்லது முழுசுகாதாரத் திட்ட ஊக்குநர் ஆகியோர் இடம் பெறுவர். கணக்கெடுப்பு குழுவினரிடம் பட்டா, குடிமைப்பொருள் வழங்கல் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்கும்போது காண்பித்து கணக்கெடுப்பினை செவ்வனே நடத்திட பொதுமக்கள் ஒத்தழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி டோபி கானா பகுதி கட்டுமானப் பணிகள் - மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தூத்துக்குடியில் தேங்காய் பித்து கட்டி குடோனில் பயங்கர தீ விபத்து!

  • Share on