• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி டோபி கானா பகுதி கட்டுமானப் பணிகள் - மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட டோபி கானா பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் ஸ்மாட் சிட்டி  திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் நகர பகுதி சார்ந்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பொதுமக்கள் பாதுகாப்பு பேணுதல்,  பாதசாரிகளுக்கு ஏதுவான நடைபாதை அமைத்தல், மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் எளிதில் வடிய மழைநீர் வடிகால் அமைத்தல், சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட டோபி கானா பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்ததாரரை அழைத்து நடைபாதை மற்றும் இதர பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்குமாறு வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர் கைது - மாவட்ட காவல்துறை அதிரடி

மாவட்டத்தில் குடிசைவாசிகள் கணக்கெடுக்கும் பணி ( ஏப்.4 - ஏப்.25) - பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்!

  • Share on