• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேர் கைது - மாவட்ட காவல்துறை அதிரடி

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குளில் ஈடுபடுபவர்களை கண்டறியும்பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் அனைத்து  உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 02.03.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சொக்கலிங்கபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சோமசேகர் மனைவி லெட்சுமிபிரியா (24) என்பவரது திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், வீட்டின் அலமாரியில் இருந்த 10½  பவுன் தங்க நகைகளை திருடியதாக நேற்று (31.03.2022) லெட்சுமிபிரியா அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், சொக்கலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் மனைவி சுப்பம்மாள் (48), அவரது கணவர் மாணிக்கம் (56) மற்றும் இவர்களது மகள் பத்திரம் (30) ஆகிய  3 பேரும் சேர்ந்து மேற்படி லெட்சுமிபிரியா வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரிவயவந்தது. உடனே மேற்படி போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 3,10,000/- மதிப்புள்ள 10½   பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று கடந்த 30.03.2022 அன்று கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குடப்ட்ட ஓணாமான்குளம் பகுதியில் உள்ள தனியார் சோலார் கம்பெனியில் இருந்து ரூபாய் 90,000/- மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய வழக்கில் கடம்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடம்பூர் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த காசி மாடசாமி மகன் ரமேஷ் (39) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி சோலார் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடியது தெரிய வந்தது. உடனே மேற்படி போலீசார்  ரமேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 90,000/- மதிப்புள்ள காப்பர் வயர்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தபட்ட லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் மற்ற சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

அதேபோன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தார் சுடலைமாடன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் கணபதி பாண்டியன் (52) என்பவருக்கு சொந்தமான கயத்தார் டூ கடம்பூர் ரோடு பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் நேற்று (31.03.2022) ரூபாய் 2,40,000/- பணம் திருடு போன வழக்கில் கயத்தார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொணடதில், கோவில்பட்டி காமராஜ்நகரை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் கணேசன் (58) என்பவர் மேற்படி நிறுவனத்தில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் கணேசனை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 2,40,000/- பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகாசலபுரம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்து ரூபாய் 1,00,000/- மதிப்புள்ள கருவிகளை திருடிய வழக்கில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பசுவந்தனை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான சுப்பையா மகன் 1) சசிக்குமார் (35), கருப்பையா மகன் 2) சின்னத்துரை (43), ஜமீன் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மணிகண்டன் (32) மற்றும் சிவகாசி, சின்னல்பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் 4) சங்கரேஸ்வன் (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து மேற்படி செல்போன் டவரில் திருடியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார்  4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 1,00,000/- மதிப்புள்ள கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் புகார் அளித்த 24 மணி நேரத்தில் 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 7,40,000/- மதிப்புள்ள நகை, பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

  • Share on

கொரோனா தொற்று நோயால் இறந்தவர்கள் நிவாரணம் பெறுவது எப்படி? ஆட்சியர் விளக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி டோபி கானா பகுதி கட்டுமானப் பணிகள் - மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

  • Share on