தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு!
தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைகாலத்திற்குள் அனைத்து பணிகளும் முழுமையாக முடிய வேண்டும் என்று அதிகாரிகள் மட்டத்தில் ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்கள் அதிகம் வந்து செல்லும் நெருக்கடி பகுதியான காமராஜ் காய்கனி மார்க்கெட் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளால் பாலவிநாயகர் கோவில் தெரு, விஇ ரோடு வழியாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வரும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இரண்டு பள்ளிகள் உள்ள நிலையில் காலையிலும் மாலையிலும் பள்ளி செல்லும் மாணவிகள் பல்வேறு வகையில் இடையூறுகளை சந்தித்து சென்று வந்தனர்.
இதுகுறித்து மேயருக்கு பல்வேறு புகார்கள் அவரது வாட்சப்பிற்கு வந்ததையடுத்து அப்பகுதிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மாற்று பணிகளும் மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இலகு ரக வாகனங்கள் இரண்டு சக்கரவாகனங்கள் கிழக்கிலிருந்து சங்கராபுரம் புதுக்கிராமம் தெருவழியாக தேவர்புரம் சாலை முச்சந்தி வழியாக வெளியே செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து போக்குவரத்து காவல்துறையினரை காலையும் மாலையும் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் வியாபாரிகளும் பாதிக்காத வகையில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், போக்குவரத்து காவல் உதவிஆய்வாளர் வெங்கட், மாவட்ட திமுக தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் நாகராஜன்பாபு, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், மற்றும் ஜோஸ்பர், உள்பட பணியாளர்கள் உடனிருந்தனர்.