• vilasalnews@gmail.com

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

  • Share on

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர் கல்லுரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 47, மற்றும் 57 சார்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட பணி மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் தூய்மை பணி மருத்துவ முகாம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி கற்பித்தல் டெங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பேரணி உள்ளிட் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில், மாப்பிள்ளையூரணி நாடார் உறவின்முறை பத்திரகாளியம்மன் கோவில் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முனைவர்கள் கோகிலா சுபத்ரா கிறிஸ்டி வசந்த சேனா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நாட்டுநலப்பணி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவிகளுக்கும் மகாலட்சுமி கல்லூரி முதல்வர் மீனாகுமாரி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரணவக்குமார், ஊர் தலைவர் ராமமூர்த்தி, ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.

முனைவர் பானுமதி மாப்பிள்ளையூரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். மகாலட்சுமி கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் மூலம் பள்ளி மாணவிகளுக்கு சேர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி காமராஜ், நன்றியுரையற்றினார்.

  • Share on

தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபம் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு

  • Share on