• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபம் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபம் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 - 2022 நிதியாண்டு முடிவடையும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய  வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான வசூல் பணியானது தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .

அது போக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு, துண்டிப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டு காலங்களாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் இருந்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல திருமண மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீண்டகாலமாக நிலுவை வைத்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர்கள் உடனடியாக அந்தந்த கால அளவிற்குள் வரிகளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி, மண்டல தலைவர்கள், அமைச்சர் மற்றும் மேயரிடம் வாழ்த்து!

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

  • Share on