தூத்துக்குடி மாநகராட்சி, மண்டல தலைவர்கள், அமைச்சர்கீதாவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல தலைவருக்கான தேர்தல் மாநகராட்சி கூட்ட அரஙகில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டல தலைவராக திரேஸ்புரம் திமுக செயலாளர் நிர்மல்ராஜ், மேற்கு மண்டல தலைவராக அன்னலெட்சுமி கோட்டுராஜா, கிழக்கு மண்டல தலைவராக கலைச்செல்வி திலகராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தெற்கு மண்டல தலைவர் பதவிக்கு வடக்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளர் வக்கீல் பாலகுருசாமி, சுயம்பு ஆகியோர் போட்டியிட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நடைபெற்ற வாக்குப்பதிவில் வக்கீல் பாலகுருசாமி 9 ஓட்டுகளும், சுயம்பு 2 ஓட்டுகளும் எடுத்து பாலகுருசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட 4 மண்டல தலைவர்களும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மண்டல தலைவர்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாநகர துணைசெயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் சின்னத்துரை, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர இளைஞரணி துணை செயலாளர்கள் செல்வின், அருண்சுந்தர், மாநகர தொண்டரணி செயலாளர் முருக இசக்கி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பல்வேறு குழு தலைவர்கள் உறுப்பினர்கள் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட உள்ளனர்.