எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு, நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர், தண்ணீர் பந்தலை கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்களின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆங்காங்கே நீர்மோர், தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.
இந்த நிலையில், எட்டயபுரம் நகர அதிமுக சார்பில், எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு, நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர், தண்ணீர் பந்தலை, இன்று அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட சேர்மன் சத்யா ,எட்டயபுரம் வார்டு செயலாளர்கள் சாந்தி, சிவா,சேக், கருப்பசாமி, சின்னத்துரை, சினா, கவுன்சிலர் அய்யம்மாள், சத்யா, சரவணன், செந்தில், முத்து, இளம்புவனம் கிளை செயலாளர் கார்த்தி, அம்மா பேரவை முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் காளிதாஸ், ராஜ்குமார், ஒன்றிய இளைஞர் அணி செயளாலர் வீரபாண்டி, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் கண்ணன் (எ) சுப்புராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.