திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருடியவரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்
திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சரவணன் (31) என்பவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்குரத வீதியில் சொந்தமாக செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 29.03.2022 அன்று காலை கடையை திறக்க வந்தபோது, அங்கு மர்மநபர்கள் கடையின் பித்தளை பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த செல்போன்களை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்க்கு சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்கணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் காவல் நியை ஆய்வாளர் சுமதி தலைமையில் உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம், முதல் நிலை காவலர் பாக்கியராஜ் மற்றும் காவலர் ராஜதுரை ஆகியோர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சரவணனின் செல்போன் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து செல்போன்களை திருடியது திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் திலீப் (எ) திலீப்குமார் (27) என்பவர் என்பது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி போலீசார் திலீப் (எ) திலீப்குமாரை இன்று (30.03.2022) கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 95,000 மதிப்புள்ள 2 புதிய செல்போன்கள், 7 பழைய செல்போன்கள் மற்றும் 2 கைக்கணிணிகள் (Tab) ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.