
மாப்பிள்ளையூரணியில் குடிநீர் சம்மந்தமாக அதிகாரிகளுடன் சண்முகையா எம்.எல்.ஏ ஆலோசனை செய்தார்.
தூத்துக்குடி ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் எம்.எல்.ஏ சண்முகையா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக பல்வேறு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கோடைகாலம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதலான தண்ணீர் வழங்கி குடிதண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூர்பாண்டி, பொறியாளர் மகேஷ், கிராம நிர்வாக அலுவலர் விக்ணேஷ், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி செயலாளர் வீரபாகு, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.