• vilasalnews@gmail.com

குரூஸ் பர்னாந்து நினைவு நாள்: அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த. செல்லப்பாண்டியன் மரியாதை

  • Share on

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் நினைவைப்போற்றும் வகையிலும் அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும் அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டுவந்த கோமான் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 92 வது நினைவுநாளை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் முழு திருஉருவ சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் முன்னாள் துணை மேயர் நெல்லை தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர்  பி. சேவியர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பகுதி செயலாளர். ஏ முருகன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P T R ராஜகோபால், முன்னாள் தொகுதி இணை செயலாளர்கள் ஞாயம் ரொமால்ட் , மாவட்ட அம்மா பேரவை  பி மூர்த்தி , மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்  ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி  சாந்தா ,மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜெனோபர், முன்னால் மாமன்ற உறுப்பினர்கள். சகாயராஜ் , மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்  எம் சங்கரேஸ்வரி, துணைத் தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள்பாலசுப்ரமணியம், திருமணி , சங்கரி, மாவட்ட மாணவரணி  மில்லை  R L ராஜா, முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சேவியர் ராஜ், முருகேசன், அசரியான், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் முருகேசன், ரெங்கன், அம்பை முருகன், சுயம்பு, கருப்பசாமி, சகாயராஜ், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள். டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், R.முருகன் மற்றும் அருண்குமார், மணிகண்டன், துரைசிங், டைமன் ராஜ், சகாயராஜ் உட்பட ஏராளமான மகளிர் அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்

  • Share on

பஞ்சாயத்தில் ரசீது வாங்கியாச்சா? அதிரசம் விற்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

மாப்பிள்ளையூரணியில் ஓட்டப்பிடார சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

  • Share on