நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானரமுட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பரணிகுமார் (எ) கார்த்தி (20) என்பவர் காளாம்பட்டி பகுதியில் அதிரசம் விற்பனை செய்தபோது, காளாம்பட்டி பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து மகன் மரிய சூசை (45) என்பவர் கார்த்திக்கிடம் எனது ஊரில் பஞ்சாயத்தில் ரசீது பெற்ற பின்தான் ஊருக்குள் அதிரசம் விற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (27.03.2022) இரவு மரியசூசை கோவில்பட்டியில் வேலை முடித்துவிட்டு திரும்பி வரும்போது வானரமுட்டி பஸ்ஸ்டாப்பில் வைத்து மேற்படி பரணிக்குமார் (எ) கார்த்தி மற்றும் வானரமுட்டி பகுதியை சேர்ந்தவர்களான ஏட்டையா மகன் ராமசாமி (44), அலங்கார் மகன் வெங்கடேஷ் (40) ஆகிய 3 பேரும் சேர்ந்து மரிய சூசையிடம் தகராறு செய்து அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மரிய சூசை அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் வழக்குப்பதிவு செய்து மேற்படி பரணிகுமார் (எ) கார்த்தி, ராமசாமி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.