தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 07.03.2022 அன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கல்மேடு விளக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து பணத்தை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் (21) என்பவரை தருவைகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் நந்தகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்ததாண்டவம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்ததாண்டவம் நந்தகுமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.