தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை வீடுபுகுந்து கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து அச்சிறுமியை மீட்டனர்
தூத்துக்குடி காதர் மீரான் நகரைச் சேர்ந்த ஜானி என்பவரது மகன் கணேசன் (22) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, நேற்று (27.03.2022) அன்று மேற்படி சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிவு செய்து மேற்படி கணேசனை கைது செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டார்.