• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி, 5 வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி, 5 வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அதிமுகவில் ஐக்கியம்.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் எஸ்.லிங்கராஜ் போட்டியிட்டார்.

இவர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அவரது பண்டாரவிளை அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ. பிரபாகர், தூத்துக்குடி வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், வர்த்தகப் பிரிவு மாவட்ட பொருளாளர் சுகுமார், வட்டக் கழக செயலாளர் ராமச்சந்திரன், பண்டாரவிளை பால்துரை, பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிமுகவில் இணைந்த லிங்கராஜ் 5வது வார்டில் 939 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் மாணவ, மணவிகளுக்கு தட்டச்சு தேர்வு நடைபெற்றது.

வேப்பலோடையில் டிஎன்.பி.எஸ்.சி கையேடு மார்கண்டேயன் எம்.எல்.ஏ வழங்கினார்

  • Share on