மாப்பிள்ளையூரணியில் நாட்டுநலப்பணி திட்டம்- மாணவ, மாணவிகள், பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.
பாரதபிரதமர் நரேந்திரமோடி தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டுநலப்பணி திட்டத்தை மாணவ, மாணவிகள் மூலம் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் பேரில் இந்தியா முழுவதும் நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மூலம் தமிழகத்தில் அப்பணிகள் மேற்கொள்ளளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியிலுள்ள ராம்தாஸ் நகர், இலங்கை அகதிகள் முகாம், குடிசை மாற்றுவாரியம் பகுதியில் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணி அணி எண் : 47, திட்ட அலுவலர், கோகிலா சுபத்ரா கிறிஸ்டி, நாட்டு நலப்பணி அணி எண் : 57, வசந்தசேனா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு அப்பகுதியில் தூய்மை பணிகளை முழுமையாக மேற்கொண்டனர்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து குடியிருக்கும் பகுதிகளை தூய்மையான பகுதிகளாக வைத்து கொள்ள வேண்டும். சுகாதாரமான வாழ்க்கையை கடைப்பிடித்து நோயற்ற வாழ்வை குறைவற்ற செல்வம் என்ற கருத்துக்கேற்ப அனைவரும் அதை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து கிளைச்செயலாளர் ரத்தினக்குமார் மற்றும் செல்வம், ஜெமீமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.