தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிேராத செயல்களை தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்
இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
குற்ற சரித்திர பதிவேடு ரவுடிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் சிறப்பு போலீஸ் தனிக்குழு அமைக்க வேண்டும். இதில் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், 4 ஆய்வாளர்கள் இடம்பெற வேண்டும். முன்விரோதம் உள்ள நபர்கள், பழிக்கு பழியாக கொலை செய்யும் நோக்கத்தில் உள்ளவர்கள், பிரச்சினை செய்யக்கூடிய நபர்களின் விவரங்களை தயார் செய்து வைத்து இருக்க வேண்டும்.
இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சட்ட விரோத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டியது போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.