• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் உள்ள புற்று நோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகிய கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

இந்த சிகிச்சை வசதிகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். மருத்துவமனையில் உள்ள மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைபிரிவுபகுதியில், புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அறுவை சிகிச்சை அரங்கை ஆய்வு செய்தார்.

மேலும், 2-வது மாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன மேம்படுத்தப்பட்ட ஐ.சி.யு பிரிவு கட்டிட பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மருந்துகள் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு அங்கு மருந்து பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற் செல்வன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்த னர்.

  • Share on

தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டி தொடர் : மேயர் ஜெகன் துவக்கிவைத்தார்

சட்டவிரோத செயல்களை தடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் எச்சரிக்கை

  • Share on