தூத்துக்குடியில் லயன்ஸ் டவுண் யுஎஸ்எல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கிவத்தார்.
தூத்துக்குடியில் லயன்ஸ் டவுண் யுஎஸ்எல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போட்டித் தொடரை துவக்கிவைத்தார். துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் ரெக்சிலின், டிட்டோ முன்னிலை வகித்தனர்.
இதில் லயன்ஸ் டவுண் சகாய மாதா ஆலய பங்குத் தந்தை பிரதிபன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ். முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயர் உதவியாளர் பிரபாகர், காரப்பேட்டை பள்ளிச் செயலாளர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வசந்த், ததேயு, விமல், ஆன்சியுஸ், ஆலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.