இளம் சீறார்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனல்மின்நகர் குடியிருப்பு பகுதியில் மனமகிழ் மன்றம் சார்பில் 10ம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மகளிர் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி அறிவுத்திறன் போட்டியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், மகளிர் துறை சார்பில் மகளிர் தினம் கொண்டாடும் போது சமத்துவம் சமுதாய மாற்றம் வேண்டும் அந்த நிகழ்ச்சியில் கணவன் மனைவி மகன் மகள் என கலந்து கொண்டு சமமாக அமர்ந்திருக்க வேண்டும். பெண்களுக்கு உரிமை உள்பட சமுதாய வளர்ச்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் பெரியார். வஉசி பெண்களுக்கு கல்வி, சம உரிமை கொடுக்க வேண்டும் என்றார். மகாகவி பாரதி சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் வெல்வதும் பாரினிலே பெண்கள் ஆள வேண்டும் என்றார். வலிமை அறிவுத்திறன் கல்விதிறன் உள்ள பெண்கள் எதையும் சாதிக்கலாம் என்ற மனவலிமை உள்ளவர்கள் ஆண்கள் உடல் வலிமை உள்ளவர்கள் உடை மற்றும் அலங்காரங்களில் நாம் கவனமாக கையாள வேண்டும். கவர்ச்சி உடை அணியக்கூடாது சென்னை நகரங்களில் சினிமாவில் நடிகர்கள் வருவது போன்று உடை அணிந்து வருகின்றார்கள். அதுபோன்று மற்ற இடங்களில் இல்லை 181 1098 1091 இந்த எண்கள் பெணகள் குழந்தைகள் ஏதுவும் பாதிப்பு இருந்தால் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். கடந்த ஆட்சியில் நடவடிக்கை இல்லாத நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவருக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் படி கட்டாய திருமணம் உள்ளிட்டவைகள் தடுக்கப்படுகின்றன.
பெண்கள் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான உணவு சாப்பிட வேண்டும். இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்து குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அப்போது தான் மூளை வளர்ச்சியடைந்து நல்ல குழந்தைகளை நாம் பெற்றெடுத்தும் வளர்க்க வேண்டும். இளம் சீறார்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் தற்போது 5ம் வகுப்பு படிக்கும் போதே பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி பலரையும் ஆசை வார்த்தை கூறி தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது. பெற்றோர்கள் கவனமுடன் இருந்து எல்லா துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றார்.
இவ்விழாவில், தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் பாலகுருசாமி, மகளிர் நிர்வாகிகள் ராஜலட்சுமி, சரோஜா, சிவகாமி சுந்தரி, உமா, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், துணைச்செயலாளர் சின்னத்துரை, மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டசெயலாளர் ஸ்டாலின், தொழிற்சங்க நிர்வாகிகள் அனல் சக்திவேல், ராஜன், பெத்துராஜ், பொதுச்செயலாளர் அரியசெல்வம், பொருளாளர் பிறைசூடி, கலைத்துறை செயலாளர் ஜோசப்கென்னடி உள்பட மகளிர் குழுக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.