தூத்துக்குடி போல்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறான மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு, அங்கு மரங்கள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மணல் திட்டுக்கள் இருப்பதாகவும், அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறான மணல் திட்டுக்களை அகற்றப்பட்டு இன்று அவ்விடங்களில் மரங்கள் நடப்பட்டது. இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வின் போது திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், ஜசக், சுகாதர அதிகாரி ஹரி கணேஷ் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.