தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த பாஸ்கரன் (எ) வெடிகுண்டு பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
15.08.2011 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காமராஜ் மார்க்கெட் ஒயின் ஷாப் அருகில் ராஜபாண்டி என்பவரின் மகன் சுரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் தனம் சுந்தரராஜன் என்பவரது மகன் பாஸ்கரன் (எ) வெடிகுண்டு பாஸ்கர் என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் IIல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பாஸ்கரன் (எ) வெடிகுண்டு பாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார், இதனால் 28.02.2022 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்த பாஸ்கர் (எ) வெடிகுண்டு பாஸ்கர் என்பவரை இன்று கைது செய்தனர்.