தூத்துக்குடிமண்டலம் கோவில் பட்டி சரக துணைப்பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள ஓ.286 வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சொந்த நிதி ஆதாரம் இல்லாமல் கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங் களில் 489 பேருக்கு ரூ.3.79 கோடி அளவிற்கு கடன் வழங்காமலேயே, நகையை மட்டும் பெற்று அடகு வைத்து கடன் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேடு நடந்துள்ளது.
இந்த நகைகள் அனைத்தும் தள்ளுபடி பெறும் நோக்கத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி , மற்றும் பிப்ரவரி மாதங்களில் அடமானம் வைக்கப்பட்டவை ஆகும். முறைகேட்டிற்கு காரணமான சங்கச் செயலர் சு.மாரியப்பன் 24-ந்தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சங்கத்தின் தலைவர் உ.செல்வராஜ் 24-ந்தேதி முதல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, முறைகேட்டிற்கு காரணமான சங்கச் செயலாளர் மற்றும் இதர நபர்கள் மீது குற்றப்புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைகேடுகள் நடைபெற்றுள்ள மேற்கண்ட 2 சங்கங்களிலும் 1983-ம் வருடத்திய தமிழ் நாடு கூட்டுறவுச் சங்கங்களின் , சட்டப்பிரிவு 8-ன் கீழ் விசார ணைக்கு உத்திரவிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.