தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இரண்டு வாரமாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 26.10.2015 அன்று மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள மீன்கடையில் முருகன் என்பவரது மனைவியை தாக்கிய வழக்கில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் சுடலை என்பவரது மகன் பிரபு என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் IIல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட நபரான பிரபு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் 14.03.2022 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் 2 வரமாக தலைமறைவாக இருந்து வந்த எதிரி பிரபு என்பவரை இன்று கைது செய்தனர்.