தூத்துக்குடியில் பெற்ற தாயை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது மகள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார் 2வது தெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து 17வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மாடசாமி தாமோதரன் நகரில் உள்ள மற்றொரு வீட்டில் தனது மற்ற மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
முனியலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் முனியலட்சுமியின் மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை தாய் முனியலட்சுமி ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை கொலை செய்ய முடிவு செய்த 17 வயது சிறுமி இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் முனியலட்சுமியை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தனது இரண்டு ஆண் நண்பர்கள் சென்றதும் காவல்துறைக்கு போன் செய்த சிறுமி, தனது தாயை யாரோ கொலை செய்து விட்டனர் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசுமருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி தனது தாயை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், தனது தாயார் முனியலட்சுமி தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் தனது நண்பருடன் சேர்ந்து கழுத்தில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக அச்சிறுமி தெரிவித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.