• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சைனிக் பள்ளி - மத்திய அரசு ஒப்புதல்!

  • Share on

அரசு சாரா நிறுவனங்கள், தனியாா் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை 2022-2023 கல்வியாண்டில் தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள விசாகா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளி திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவது என்ற அரசின் முன்னெடுப்பின் கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போதுள்ள சைனிக் பள்ளிகளிலிருந்து இவை மாறுபட்டதாக இருக்கும்.

தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சோ்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் கீழ் இந்த சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

இதன் மூலம், தனியாா் துறையும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இன்றைய இளைஞா்களை நாளை பொறுப்புமிக்க குடிமக்களாக திகழச் செய்ய முடியும்.

அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு 12 புதிய பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆறு தனியாா் பள்ளிகளிலும், 3 மாநில அரசு பள்ளிகளிலும் சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சைனிக் பள்ளியில் உள்ளது போல், புதிதாக அமையவுள்ள அனைத்து பள்ளிகளும் உண்டு-உறைவிட பள்ளிகளாக இருக்காது.

மொத்தமுள்ள 21 புதிய சைனிக் பள்ளிகளில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியாா் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளியை திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

  • Share on

கள் விற்பனை செய்ய போலீசாருக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் கொடுக்கிறேன் - பனை தொழிலாளி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு!

தூத்துக்குடி அருகே லாரி - இருசக்கரவாகனம் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on