கள் விற்பனை செய்வதற்காக, கொப்பம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருகிறேன் என, போலீசாரிடம் பனை ஏறும் தொழிலாளி பேசிய வீடியோ, சமூக வலைத ளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள, கொப்பம் பட்டி போலீஸ் ஸ்டேஷ னுக்கு உட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக கள் விற்பனை நடந்து வருவதாக, கோவில் பட்டி டி.எஸ்.பி., உதயசூரியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கள் விற்பனை செய்ய வர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை யைச் சேர்ந்த போலீசார், கொப்பம்பட்டி பகுதிகளில் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில், சட்ட விரோதமாக கள் விற்பனை செய்யப் படுவது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கள் விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியிடம் விசாரித்தனர்.
அப்போது, அந்த தொழிலாளி, கள் விற்பனை செய்வதற்காக கொப்பம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, மாதம் மாதம் ரூ. 10 ஆயிரம் கொடுத்து வருகிறேன், போலீசார் கூறியபடி, காமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு மெடிக்கலில் வழக்கமாக பணத்தை கொடுத்துவிடுவேன் என்று, தனிப்படை போலீசாரிடம் கூறி யுள்ளார்.
தனிப்படை போலீசாரிடம் பனை ஏறும் தொழிலாளி பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிகிறது. இதில், இன்னொரு காவலரும் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அந்த பனை ஏறும் தொழிலாளி அந்த காவலருக்கு போன் செய்து பேசுகிறார். பின்னர் வந்திருந்த தனிப்படை போலீசாரிடம் போனை கொடுத்து பேச சொல்கிறார்.
தனிப்படை போலீசும், கொப்பம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் ஒரு போலீசும் போனில் பேசிக் கொள்கின்றனர். அதில், டி.எஸ்.பி., உத் தரவின் பேரில் ரெய்டுக்கு வந்துள்ளோம், கள்ளை பறிமுதல் செய்ய போகிறோம் என தனிப்படை காவலர் தெரிவித்தார்.இந்த நிகழ்வுகள் எல்லாம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து டி.எஸ். பி., உதய சூரியன் கூறுகையில், “போலீசார் யாராவது தவறு செய்வது உறுதிப்படுத் தப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில், இது தொடர்பாக மேற்படி 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.