தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் இன்று (26.03.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் எதிரே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு, எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ரகு (36) என்பவர் அப்பகுதியில் வந்து கொண்டு இருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் ரகுவை கைது செய்தனர்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ரகு மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு, கஞ்சா விற்பனை உட்பட 14 வழக்குகளும், தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பணியகம் குற்றப்புலனாய்வுப் பிரிவு (Tut NIB CID) காவல் நிலையத்தில் 7 கஞ்சா வழக்குகளும் என 21 மொத்தம் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.