• vilasalnews@gmail.com

25 வருடங்கள் சிறப்பாக பணி நிறைவு செய்த காவல்துறையினரின் வெள்ளிவிழா நிகழ்ச்சி : எஸ்பி பங்கேற்று நினைவுபரிசுகள் வழங்கி பாராட்டு

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 வருடங்கள் சிறப்பாக பணி நிறைவு செய்த காவல்துறையினரின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவுபரிசுகள் வழங்கி காவல்துறையினரை பாராட்டினார்.       

தூத்துக்குடி மாவட்டத்தில் 1997ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த 81 பேர் பதவி உயர்வுகள் பெற்று தற்போது தலைமைக்காவலர்களாக சிறப்பான முறையில் பணியாற்றி இன்றுடன் (26.03.2022) 25 வருடங்கள் நிறைவு செய்துள்ளனர்.

மேற்படி தலைமைக் காவலர்கள் 25 வருடங்கள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி நிறைவு செய்ததை நினைவுகூறும் வகையில் இன்று (26.03.2022) வெள்ளிவிழா நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்யா அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நினைவு பரிசுகள் வழங்கி  பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், காவல்துறையில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  காவல்துறையின் பணியை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தது உங்கள் குடும்பத்தார்தான். ஆகவே அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைiயும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போன்று நீங்கள் காவல்துறையில் மென்மேலும் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆய்வாளர் கற்பகவள்ளி தலைமையில் தலைமைக்காவலர்கள் அண்ணாத்துரை, கணேசன், பாலசுப்பிரமணியன், அர்ச்சுணராஜ், அரிக்கிருஷ்ணன், ரகு, சுடலைமுத்து, லூர்தாவாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

டீக்கடையில் பின்புறம் ஓட்டை போட்டு பணம் திருட்டு : வாலிபர் கைது!

கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உட்பட 21 வழக்குகள் : தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது!

  • Share on