• vilasalnews@gmail.com

டீக்கடையில் பின்புறம் ஓட்டை போட்டு பணம் திருட்டு : வாலிபர் கைது!

  • Share on

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டீக்கடையில் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்

நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலாட்டின்புதூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் ராஜா (32) என்பவர் நாலாட்டின்புதூர் RF ரோடு பகுதியில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று (25.03.2022) காலை கடைக்கு சென்று பார்க்கும்பொழுது கடையின் பின்புறம் வழியாக ஓட்டை போட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூபாய் 12,000 பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ராஜாவின் டீ கடைக்குள் நுழைந்து பணத்தை திருடியது மருதங்கிணறு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வல்லரசு (19) என்பது தெரியவந்தது.

உடனே நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முப்பிடாதி வழக்குபதிவு செய்து மேற்படி  வல்லரசுவை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 12,000 பணத்தையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

குடிபோதையில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

25 வருடங்கள் சிறப்பாக பணி நிறைவு செய்த காவல்துறையினரின் வெள்ளிவிழா நிகழ்ச்சி : எஸ்பி பங்கேற்று நினைவுபரிசுகள் வழங்கி பாராட்டு

  • Share on