தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ் (21) என்பவருக்கும், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த அசன் மகன் ரகுமான் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ் தூத்துக்குடி, மாணிக்கம் மஹால் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ரகுமான் மற்றும் அவரது நண்பர் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தார்.