தூத்துக்குடியில் நடைபெறும் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் நிகழ்ச்சிக்கு தடை கோரி இந்து மக்கள் கட்சியினர் நகர காவல் துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி சின்னகோவில் வளாகத்தில் இன்று (26-3-2022) மாலை 5 மணி அளவில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டம் என்ற பெயரில் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் ஆண்டகை நடத்தும் நிகழ்ச்சியில் மாணவி லாவண்யா மரணத்திற்கு காரணமாக, அரசால் கைது செய்யப்பட்ட சகாயமேரிக்கு ஆதரவாகவும். கட்டாய மதமாற்றத்திற்கு ஆதரவாகவும், ஹிஜாப் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறி அரசுக்கு எதிராகவும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. மேலும் தூத்துக்குடியில் மீண்டும் ஓர் கலவரத்திற்கு இந்நிகழ்ச்சி வித்தாகி விடுமோ? என்ற ஐயம் தோன்றுகிறது.
ஆகவே ஐயா அவர்கள் பொது அமைதியை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் செல்வ சுந்தர், பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் சாஸ்தா, வார்டு பொறுப்பாளர்கள் தம்பிராஜா ,ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.