![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2022/03/26/1648277142.jpg)
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்களை பெற 15 நாட்களுக்கு மேலாக காத்திருந்தல், அழைக்கழிப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பல்வேறு தரப்பு மக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
மாநகர மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகளுடன் கலந்து பேசி மூன்றே நாட்களில் சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் உடனடியாகவும், எளிதாகவும் சான்றிதழ்களை பெற்றிடும் வகையில், தமிழக அரசின் இணையதள முகவரியில் ( https://www.crstn.org/ ) மாநகராட்சி நிர்வாகம் மூன்றே நாட்களில் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மூன்றே நாட்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் பெற்றிட முடியும். இந்த புதிய அதிரடி திட்ட அறிவிப்பு குறித்த தகவலை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றதில் இருந்து தனது கவனத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கானுதல், மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், குடிநீர் பிரச்சனையை போக்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தூத்துக்குடி மாநகர மக்களின் நன்மதிப்பையும், வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறார்.
தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பெற்றிடும் வகையிலான ஒர் புதிய திட்டத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும் .