ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காப்பர் வயர்களை திருடியவரைகைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 80,000 மதிப்பிலான காப்பர் வயர்களையும் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம், சிவராமமங்களம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் முத்துராமலிங்கம் (50) என்பவர் ஸ்ரீவைகுண்டம், வரதராஜபுரம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் மின்மோட்டாருக்கு பொருத்தியிருந்த 20 கிலோ காப்பர் வயர்களை ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த கபீர் முகைதீன் மகன் காஜா முகைதீன் (24) என்பவர் திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் வழக்கு பதிவு செய்து காஜா முகைதீனை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 80,000 மதிப்பிலான 20 கிலோ காப்பர் வயர்களை பறிமுதல் செய்தார்.