• vilasalnews@gmail.com

சாயர்புரத்தில் மாநில அளவில் ஆண்-பெண்களுக்கான சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டி - 157 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

  • Share on

சாயர்புரத்தில் மாநில அளவில் ஆண்-பெண்களுக்கான சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டி தொடங்கியது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 157வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்கமும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஆண்கள்-பெண்களுக்கான 2021-22ம் ஆண்டுக்கான சாம்பியன் ஷிப் பளு தூக்கும் போட்டி தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு, தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க தலைவரும், சாயர்புரம் டாக்டர்.ஜி.யு.போப் இன்ஜினீயரிங் கல்லூரி தாளாளருமான ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்டக், சேகர தலைவர்கள் டேனியல் ஞானப்பிரகாசம்(சாயர்புரம்), டேவிட்ராஜ்(சுப்பிரமணியபுரம்) சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெபர்சன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க துணைத்தலைவர் பாலமுருகன், தொழில்அதிபர் ஏ.எம்.விஜயராஜா, சாயர்புரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பாக்கியலெட்சுமி, திமுக பொறுப்பாளர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்க தலைவர் அசோக் வரவேற்றார்.

மாநில அளவிலான போட்டியை திருச்செந்தூர் சப்-கலெக்டர் புகாரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர், வீராங்கணைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

முதல்நாள் போட்டியான நேற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஆண்கள் 60பேர், பெண்கள் 97பேர் என மொத்தம் 157 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று(26ம் தேதி) நடக்கும் போட்டிகளைத்தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4மணிக்கு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது.

விழாவில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.போட்டிக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினரான ராஜேஷ் ரவிசந்தர், அசோக், நெல்சன் பொன்ராஜ், ஸ்ரீதர், நவராஜ் புல்கானின் டேனியல், பால்ராம், குணசேகர், தமிழரசன், செல்வின், பிரதீப், செண்பகமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் ஈஸ்டர், அலெக்ஸ் ஞானமுத்து, அற்புதராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் கொலை சம்பவம் - 3 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம்!

  • Share on