தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில், 3 பேர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நேற்று (24.03.2022) மாலை புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பன் மகன் முத்துப்பாண்டி (45) என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 24 மணி நேரத்தில் லட்சுமணன், கருப்பசாமி மற்றும் செல்வகணேஷ் என்ற வடை ஆகிய மூவரையும் கைது செய்த நிலையில் தற்போது மேலும் தூத்துக்குடி தாளமுத்துநகர், பாலதண்டாயுதநகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சண்முக விக்னேஷ் (26) என்பவரையும் கைது செய்தனர்.