தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட மருமகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முருகன் மனைவி ஆரோக்கியமேரி (55) என்பவருக்கும், இவரது மருமகனான அதே பகுதியைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் கருப்பசாமி(24) என்பவருக்கும் நேற்று (24.03.2022) குடும்ப பிரச்சனையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி மற்றும் அவரது சகோதரர் முனியசாமி(20) ஆகிய இருவரும் சேர்ந்து ஆரோக்கியமேரியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆரோக்கியமேரியின் மகள் சந்தனமாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி மற்றும் முனியசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.