கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உசிலங்குளம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்த திருமலை மகன் அய்யாசாமி (48) என்பவரின் தோட்டமும் அதே பகுதியை சேர்ந்த சூசை மாணிக்கம் மகன் பசுபதி (57) என்பவரின் தோட்டமும் அருகருகே உள்ளது. தோட்டத்திற்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (24.03.2022) பசுபதி அய்யாசாமியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அய்யாசாமி அளித்த புகாரின் பேரில் கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து மேற்படி பசுபதியை கைது செய்தார்.