தூத்துக்குடி மாவட்டம், ஏரல், காவல்காடு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சரவணன் (39) என்பவருக்கும் ஏரல் இடையர்காடு, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் கௌரிபாலன் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (24.03.2022) சரவணன் இடையர்காடு, மெயின் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கௌரிபாலன், சரவணனனிடம் தகராறு செய்து சாதி பெயரை சொல்லி திட்டி, சரவணனை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து கௌரி பாலன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.