• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு

  • Share on

தூத்துக்குடியில் வருகிற 1-ந் தேதி முதல் முடிதிருத்தும் கட்டணத்தை உயர்த்த தொழிலாளர் சங்கத்தில் முடிவு செய்துள்ளனர்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு கிளை முடிதிருத்தும் அழகு கலை அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம், மருத்துவர் சமுதாய பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புதிய தலைவராக வேல்ராஜ், செயலாளராக திருப்பதி, பொருளாளராக காசிலிங்கம், துணைத்தலைவராக திருமணி, துணை செயலாளராக பார்த்திபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் 1.4.22 முதல் முடிதிருத்தும் கட்டணத்தை உயர்த்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு கொலையால் பரபரப்பு!

ஏரல் : அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

  • Share on