• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் : பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

  • Share on

பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், லட்சுமி நாராயணபுரம், காலனி தெருவைச் சேர்ந்த முத்துவேல் மனைவி விஜயலட்சுமி (42) என்பவரது வீட்டில் இருந்த மூன்று மிளகாய்  முடைகளை லட்சுமி நாராயணபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் முருகாண்டி (37) என்பவர் திருடி விற்றுள்ளார். இது சம்பந்தமாக 22.03.2022 அன்று விஜயலட்சுமி, முருகாண்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் முருகாண்டி, விஜயலட்சுமியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காசிலிங்கம் வழக்குப்பதிவு செய்து எதிரி முருகாண்டியை கைது செய்தார்.

மேற்படி கைதுசெய்யப்பட்ட  முருகாண்டி என்பவர் மீது விளாத்திகுளம் காவல் நிலையத்தில் வழிப்பறி உட்பட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

  • Share on

நலிவடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கல் - மாவட்ட ஆட்சியர்!

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி!

  • Share on