திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் PMKVY 3.0 திட்டத்தின் அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையின்படி மத்திய அரசு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் அளிக்கும் இலவச பயிற்சி திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இந்த இலவச பயிற்சி திட்டத்தின் மூலம் Electrician Domestic Solutions, Four Wheeler service Technician ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது.
Electrician Domestic Solutions குறுகியகால பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி Four Wheeler service Technician குறுகியகால பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி திட்டத்தில் சேரவிருப்பம் உள்ளவர்கள் கல்விச்சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், ஆதார் நகல், வங்கிகணக்கு எண் நகல், புகைப்படம், அலைப்பேசி எண் மற்றும் இ.மெயில் ஐடி உடன் அரசு தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் 31.03.2022 க்குள் நேரில் வருகை தந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.