ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி கல்லால் தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மனைவி தாயம்மாள் (37) என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வடிவு என்பவரது மகன் காசி (38) என்பவருக்கும் இடையே கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் (22.03.2022) தாயம்மாளிடம் மேற்படி காசி என்பவர் கழிவுநீர் செல்வது சம்பந்தமாக தகராறு செய்து அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி உள்ளார்.
இதுகுறித்து தாயம்மாள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வசந்த்குமார் வழக்குப்பதிவு செய்து மேற்படி காசி என்பவரை கைது செய்தார்.
மேற்படி காசி மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.