தூத்துக்குடியில் 148 பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழை மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்.
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பணை சங்கத்தில் 148 பயனாளிகளுக்கு 57.94 லட்சத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைசச்ர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.9.2021 அன்று சட்டமன்ற பேரவை நிதி எண்: 110ன் கீழ் 40 கிராமுக்குட்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு பொதுநகைக்கடன்கள் கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் பொதுநகைக்கடன் கூட்டுறவு சங்கங்களில் பெற்றவர்களுக்கு நகைக்கான அசல் வட்டி போன்றவை தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் பயனாளிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 148 பயனாளிகளுக்கு ரூ.57.94 லட்சத்தில் நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஈடுவைத்த நகைகளை திரும்ப ஓப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நகைகடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு வழங்கினார். தள்ளுபடி பெற்ற பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் வி.அந்தோணி பட்டுராஜ், தூத்துக்குடி சரக துணைப்பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் சேவியர், சங்க மேலாளர் லலிதா, சங்க முதுநிலை எழுத்தர் சந்திரா, சங்க பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 63558 எண்ணிக்கையிலான பொது நகைகடன்கள் ரூ.180.93 கோடியில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடதக்கது